Suriya Karuppu Teaser Scence Copy From Other Movies : சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகளிடையெ கொண்டாடப்பட்டு வரும் கருப்பு டீசரில் மட்டும் இத்தனை படங்களின் காப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். சுர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டு முன்பு வாழ்த்து சொல்ல ஏராளமான ரசிகர்கள் குவித்தனர். அவர்களை வீட்டு மாடியிலிருந்து சந்தித்த சூர்யா அவர்களை பார்த்தவாறு செஃலி எடுத்து மகிழ்ந்துள்ளார்.
கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா கருப்பு படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி என்கிற சுப்பிரமணியம், சுவாஸிகா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 45ஆவது படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
25
கருப்பு பட டீசர் காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டதா?
இந்த நிலையில் தான் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஒரு பக்கம் சூர்யாவின் ரசிகர்கள் டீசரை கொண்டாடி வரும் நிலையில் மறுபக்கம் டீசரை அலசி ஆராயந்து வருகின்றனர். அதில், இந்தப் படத்தின் டீசரில் பல படங்களின் காட்சிகள் ஒத்திருப்பதாக விமர்சித்துள்ளனர்.
அதன்படி கருப்பு டீசரில் மாஸ்டர், பீஸ்ட், காலா, கஜினி, வேல் அஞ்சான், அண்ணாத்த இப்படி பல படங்களில் சாயல் அதாவது சூர்யாவின் கெட்டப் காட்சிகளில் சாயல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர். கை விரலை மடக்குவதாக இருக்கட்டும், அவரது பிளாக் பேண்ட் மற்றும் ஒயிட் சர்ட்டாக இருக்கட்டும் எல்லாமே விஜய் படங்களில் காட்சிகளை ஒத்திருக்கிறது.
35
சூர்யா நடித்த படங்கள், கங்குவா, த்ரிஷா,
இதே போன்று சூர்யாவின் பிளாக் சர்ட், ரஜினியின் காலா படத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சூர்யா வாட்டர்மெலன் சாப்பிடும் காட்சியை பார்க்கும் போது சமீப காலமாக இன்ஸ்டாவில் பிரபலமாகி வரும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை இமிட் செய்வதாக தெரிகிறது. மேலும், சூர்யாவின் லுக்கும் கிட்டத்தட்ட ரஜினியை பார்ப்பது போன்றுதான் தெரிகிறது. அந்தளவிற்கு டீசரின் ஒவ்வொரு காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கிறது.
45
சூர்யாவின் கருப்பு டீசர், சுர்யா 50ஆவது பிறந்தநாள்
டீசரை பார்க்கும் போது இத்தனை ஆண்டுகள் காலம் சூர்யா நடிப்பில் வந்த எந்தப் படமும் இந்தளவிற்கு ரசிகர்களிடையே ரீச் கொடுத்திருக்காது என்று சொல்லப்படுகிறது. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
55
கருப்பு டீசர், ஆர்ஜே பாலாஜி, சூர்யா
டீசரை வைத்து பார்க்கையில் இந்தப் படத்தில் சூர்யா கருப்புவாகவும், சரவணனாகவும் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் என்று யூகிக்க முடிகிறது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஆர்ஜே பாலாஜி தான் வில்லன் என்றும் சொல்லப்படுகிறது. டீசரில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சூர்யா தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆர்ஜே பாலாஜி தெளிவாக காட்டப்படவில்லை. கருப்பு டீசர் வெளியாகி 8 மணி நேரம் கடந்த நிலையில் 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.