சூர்யாவும் மமிதா பைஜுவும் முதல்முறையாக இணையும் புதிய படத்தின் கதைக்களம் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அப்படத்தைப்பற்றி தயாரிப்பாளர் நாக வம்சி பேசியுள்ளதை பார்க்கலாம்.
குறுகிய காலத்தில் மமிதா பைஜுவைப் போல திரைத்துறையில் வளர்ச்சி கண்ட நடிகைகள் எந்த மொழியிலும் அரிதாகவே இருப்பார்கள். 'பிரேமலு' மூலம் மற்ற மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த மமிதா, பல குறிப்பிடத்தக்க தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' உட்பட அந்தப் பட்டியலில் நிறைய படங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான், சூர்யாவை நாயகனாகக் கொண்டு 'லக்கி பாஸ்கர்' பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் திரைப்படம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் 46-வது படமாகும். தற்போது, இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறியுள்ள விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
24
சூர்யா 46 கதைக்களம் என்ன?
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில், தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான நாக வம்சி 'சூர்யா 46' படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் கதைக்களம் குறித்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நாக வம்சி சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இது ஒரு அசாதாரணமான காதல் கதை என்று அவர் கூறுகிறார். இப்படத்தில் சூர்யா 45 வயதுடைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மமிதாவின் நாயகி கதாபாத்திரத்திற்கு 20 வயது.
34
கஜினி போல் சூர்யா 46
சூர்யாவின் பெரிதும் கொண்டாடப்பட்ட படமான 'கஜினி'யில் அவர் நடித்த சஞ்சய் ராமசாமியின் சில சாயல்கள் இந்தப் படத்திலும் இருக்கும் என்று நாக வம்சி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக வயது வித்தியாசம் உள்ள இருவருக்கு இடையேயான உறவின் நுணுக்கங்களையும், அழகியலையும் வெங்கி அட்லூரி இந்தப் படத்தின் மூலம் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு வயது வித்தியாசம் உள்ள இருவருக்கு இடையே காதல் சாத்தியமா என்பதையும் இப்படம் ஆராயும் என தெரிகிறது.
அதே சமயம், இப்படத்தின் ஓடிடி உரிமம் ரிலீசுக்கு முன்பே விற்கப்பட்டுவிட்டது. முன்னணி டிஜிட்டல் தளமான நெட்ஃபிளிக்ஸ் இந்த உரிமத்தை வாங்கியுள்ளது. திரையரங்கில் வெளியான 35-40 நாட்களுக்குப் பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாகுமாம். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ என இப்படத்தின் மற்ற நட்சத்திர பட்டாளமும் கவனத்தை ஈர்க்கிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படம் 2026ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.