இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.100 கோடி வசூலா...! கோலிவுட்டை மிரளவைத்த ‘சூர்யா 42’ படத்தின் பிசினஸ்

Published : Jan 03, 2023, 12:57 PM IST

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே அப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 

PREV
14
இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.100 கோடி வசூலா...! கோலிவுட்டை மிரளவைத்த ‘சூர்யா 42’ படத்தின் பிசினஸ்

தெலுங்கில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்து வந்தவர் சிவா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து அஜித்துடன் கூட்டணி சேர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார் சிவா. பின்னர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை அவர் இயக்கி இருந்தார்.

24

இவ்வாறு தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிவா, தற்போது நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா, பல்வேறு விதமான கெட் அப்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... டேட்டிங் சென்றபோது... பிரபல நடிகருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த தமன்னா - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

34

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் தயாராகும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகவும் வித்தியாசமான படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

44

இந்நிலையில், சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே அப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி இப்படத்தின் இந்தி பதிப்பின் திரையரங்க உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். பென் ஸ்டூடியோஸ் என்கிற நிறுவனம் இதனை வாங்கி உள்ளது. தமிழ் படத்தின் உரிமை இந்தியில் இந்த அளவுக்கு விற்பனை ஆவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை ‘தளபதி 67’க்கு லோகேஷ் போட்ட பக்கா பிளான்... எப்புட்ரா என விஜய்யே வியந்துட்டாராம்

Read more Photos on
click me!

Recommended Stories