இதனால் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடியை முதலீடு செய்து பிரம்மாண்ட படங்களை எடுக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளதாம். குறிப்பாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரித்து வருகின்றனர்.