அஜித் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போட்ட சென்சார் போர்டு... வெளியானது துணிவு பட சென்சார் சான்றிதழ்

First Published | Jan 3, 2023, 8:27 AM IST

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. 

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தா பாணியில் நெகடிவ் கேரக்டரில் நடித்துள்ளார் அஜித். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ள எச்.வினோத். இதில் அஜித்துடன் முதன்முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துணிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்த டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்பது தான் உண்மை. இந்த டிரைலரை பார்க்கும் போது பீஸ்ட் படத்தை பார்ப்பது போல் உள்ளதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதனால் படக்குழுவும் சற்று அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 60 வயதிலும் அடங்காத ஆசை! பிரபல நடிகையை 4-வது திருமணம் செய்யும் சீனியர் நடிகர்- லிப்கிஸ் உடன் வெளியான அறிவிப்பு

Tap to resize

இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மேலும் இது 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 17 இடங்களில் பீப் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி படக்குழு என்னென்ன காட்சிகளுக்கு மியூட் செய்துள்ளனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி ஏராளமான ஆபாச வார்த்தைகளுக்கு பீப் போட்டு சென்சார் போர்டு, வடக்கன்ஸ் என்கிற வர்த்தையையும் மியூட் செய்துள்ளதாம். அதுமட்டுமின்றி காசேதான் கடவுளடா பாடலில் காந்தி என்கிற வார்த்தைக்கு பீப் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் பீப் போட்ட பின்னர் தான் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... KH234: 3ஆவது முறையாக கமலுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா!

Latest Videos

click me!