இன்று தாதா சாகேப் பால்கே விருது பெரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! கொண்டாடும் ரசிகர்கள்..!

First Published | Oct 25, 2021, 12:14 PM IST

திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது (dada saheb phalke award). இந்திய திரைத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

2019ம் ஆண்டு இந்த தாதா சாகேப் பால்கே விருதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா காரணமாக விருது நிகழ்ச்சி நடைபெறாததால் ரஜினிகாந்த் விருதை பெற்றுக் கொள்ளவில்லை.

இந் நிலையில் இன்று அக்டோபர் 25ம் தேதி டெல்லியில் நடைபெற  விழா ஒன்றில் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tap to resize

அதே நாளில் 2019ம் ஆண்டின் தேசிய விருதுகளும் அளிக்கப்பட உள்ளன. சிறந்த படத்துக்கான தேசிய விருது மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கன் என்ற படத்துக்கு வழங்கப்பட உள்ளது.

அசுரன் படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை விஜய் சேதுபதி பெறுகிறார்.

Latest Videos

click me!