Rajini fan: ரசிகரின் சேவையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய சூப்பர் ஸ்டார்.! மதுரைகாரருக்கு ரஜினிகாந்த் கொடுத்த 'கோல்டன்' சர்ப்ரைஸ்.!

Published : Jan 26, 2026, 12:24 PM IST

Rajini:மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி சமூக சேவை செய்யும் தனது ரசிகரான ரஜினி சேகரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்ததுடன், சேகர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

PREV
15
ரசிகருக்கு மரியாதை செய்த தலைவர்.!

திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ரசிகர்களின் நற்பணிகளை எப்போதும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில், மதுரையில் மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கி சமூக சேவை செய்து வரும் தனது தீவிர ரசிகர் ஒருவரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

25
5 ரூபாய் பரோட்டா சேவை.!

மதுரையைச் சேர்ந்த ரஜினிசேகர் என்ற ரஜினி ரசிகர், அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்றைய விலைவாசி உயர்விலும், ஏழை எளிய மக்கள் பசியார வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது இந்தச் சேவை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. லாபத்தை நோக்ககமாகக் கொள்ளாமல், மக்கள் சேவையே மகேசன் சேவை என இவர் செய்து வரும் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது.

35
நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்.!

தன்னுடைய ரசிகர் ஒருவர் இத்தகைய உன்னதமான சேவையைச் செய்து வருவதை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரைத் தனது இல்லத்திற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, ரஜினிசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னைக்குச் சென்று ரஜினிகாந்தைச் சந்தித்தனர். சந்திப்பின் போது, ரஜினிசேகர் செய்து வரும் சேவைகள் குறித்து ரஜினிகாந்த் விரிவாகக் கேட்டறிந்தார். ஒரு சாதாரண ரசிகனாக இருந்து கொண்டு சமூகத்திற்குப் பயனுள்ள இத்தகைய காரியத்தைச் செய்து வருவதைக் கண்டு அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

45
தங்கச் சங்கிலி பரிசு.!

ரஜினி சேகரின்சேவையைப் பாராட்டும் விதமாக, அவருக்கு ரஜினிகாந்த் ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அணிவித்து கௌரவித்தார். மேலும், அவரது குடும்பத்தினருடனும் சிறிது நேரம் உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

55
நெகிழ்ச்சியில் ரசிகர்.!

இந்தச் சந்திப்பு குறித்து ரஜினிசேகர் கூறுகையில், "தலைவரைச் சந்தித்தது என் வாழ்நாளின் மிகப்பெரிய கனவு. அவர் எனது சேவையைப் பாராட்டி, தங்கச் சங்கிலி அணிவித்தது எனக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. ஏழை மக்களுக்கான எனது இந்தச் சேவை தொடர்ந்து நடைபெறும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்தச் செயல், "நல்லதைச் செய்வோம், நல்லதே நடக்கும்" என்ற அவரது தாரக மந்திரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதாக அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories