- Home
- Gallery
- cinema cut outs | விண்ணை தொடும் கட்அவுட் யாரு வச்சிருக்கா தெரியுமா? விஜய், அஜித்தை மிஞ்சிய கன்னட ஹீரோ!
cinema cut outs | விண்ணை தொடும் கட்அவுட் யாரு வச்சிருக்கா தெரியுமா? விஜய், அஜித்தை மிஞ்சிய கன்னட ஹீரோ!
நம் நாட்டில் சினிமா நடிகர்கள், நடிகைகளை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். மேலும், நடிகர்கள் மீதான அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் படங்கள் வெளியாகும் போது, மிகப் பெரிய கட்அவுட்டை வைத்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இதுவரை மிகப்பெரிய கட்அவுட் வைக்கப்பட்ட நடிகர் யார் தெரியுமா? அவர்கள் கட்அவுட் உயரம் குறித்து இங்கே பார்கலாம்.

பாலகிருஷ்ணா
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, என்டிஆரின் கதைநாயகுடு படத்தில் நடித்தபோது, அவரது ரசிகர்கள் அவருக்கா 100 அடி உயர கட்அவுட்டை உருவாக்கி கொண்டாடினர். இது நாட்டிலேயே 8வது உயரமான கட்அவுட்டாகப் புகழ் பெற்றது.
மகேஷ் பாபு
தெலுங்கு சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ‘அகடு’ படம் வெளியானபோது, அவரது ரசிகர்களும் 100 அடி உயர கட்அவுட்டை வைத்து கொண்டாடினர்.
ஜூனியர் என்டிஆர்
மற்றொரு தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆரின் அடுர்ஸ் திரைப்படம் வெளியானபோது, அவரது ரசிகர்கள் அவருக்கு 120 அடி உயர கட்அவுட் வைத்து ரசித்தனர்.
கோலிவுட்.. ஆகஸ்ட் 15.. நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இரு கிளாசிக் ஹீரோஸ் - வெல்லப்போவது யார்?
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபல நடிகரான தளபதி விஜய்யின் ரசிகர்கள், சர்கார் திரைப்பட வெளியீட்டின் போது 175 அடி உயர கட்அவுட் வைத்து கொண்டாடி தீர்த்தனர்.
தனுஷ்
விஜய்யை மிஞ்சும் விதமாக தனுஷின் மாரி 2 பட வெளியீட்டின் போது, தனுஷ் ரசிகர்கள் 180 அடி உயர கட்அவுட் வைத்து கொண்டாடினர்.
அஜித் குமார்
நடிகர் அஜித் குமாரின் ரசிகர்களும் நாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்காக, விஸ்வாசம் பட வெளியீட்டின் போது 190 அடி உயர கட்அவுட்டை வைத்து கொண்டாடினர்.
உண்மையான தங்க இழைகளால் செய்யப்பட்ட பிங்க் நிற சார்பாக் புடவையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி..
சூர்யா
நடிகர் சூர்யாவின் NGK திரைப்பட வெளியீட்டின் போது சூர்யாவின் 215 அடி உயர கட்அவுட் அவரது ரசிகர்களால் வைக்கப்பட்டது.
ராக்கிங் ஸ்டார் யாஷ்
கர்நாடகாவின் முதல் பான் இந்தியா ஸ்டார் நடிகர் யாஷ், KGF திரைப்பட வெளியீட்டின் போது, அவரது ரசிகர்கள் 217 அடி உயர கட்அவுட்டை வைத்து கொண்டாடினர். இதன் மூலம் உலகிலேயே மிக உயரமான கட்அவுட் வைத்தவர் என்ற பெருமையை நடிகர் யாஷ் பெற்றுள்ளார்.
கிச்சா சுதீப்
இந்திய சினிமாவிலேயே மிக உயரமான கட்அவுட் வைக்கப்பட்டது கன்னட நடிகர் கிச்சா சுதீப் அவர்களுகு தான். மேலும், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா டவரின் மேல் கிச்சா சுதீப் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.