கருப்பன்… குசும்புக்காரன்… என்ற ஒற்றை வசனத்தால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மீசை தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்த தன் மூலமாக பிரபலமானார்.
பெரிய மீசையும், தாடியும், கட்ட குரலும் தான் அவருடைய தனிப்பட்ட அடையாளமாகவே ரசிகர்களால்பார்க்கப்பட்டது. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசியை பார்த்து இவரா அது? என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு மொட்டை தலையுடன், எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமான நிலைக்கு மாறியுள்ளார்.
தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் உதவி கேட்டு மன்றாடினார். உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக அவருக்கு இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 ஆயிரமும், ரூ.20 ஆயிரமும் கொடுத்தோடு, அவருடைய குடும்பத்திற்கு 3 வேளை உணவு வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார் நடிகர் சூரி.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி சக நடிகரான செளந்தர் மூலமாக ரூ.1 லட்சம் ரூபாயை அனுப்பிவைத்துள்ளார்.அத்தோடு இல்லாமல் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் சேதுபதி, மாமா உனக்கு ஒன்னும் ஆகாது மாமா, தைரியமா இரு.. நாங்க எல்லாம் இருக்கோம். இன்னும் 2 மாசத்தில் நீ பழைய மாதிரி மாறிடுவீங்க. நம்பிக்கையாக இருங்க என ஆறுதல் கூறினார்.
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்த ரஜினி, அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் படி தன்னுடைய அலுவலகத்தில் இருப்பவர்களிடமும் கூறியுள்ளார்.