கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 173 திரைப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய நிலையில், அப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதை பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. அதோடு அப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்போகிறோம் என ரிலீஸ் தேதி உடன் அறிவித்து இருந்தனர். ஆனால் நேற்று திடீரென தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி. விலகுவதற்கான காரணத்தை அவர் விவரமாக சொல்லவில்லை. இதனால் தலைவர் 173 படம் டிராப் ஆனதா? இல்லை வேறு இயக்குனருடன் தொடருமா என்கிற கேள்வி எழுந்தது.
25
தலைவர் 173 திரைப்படம் டிராப் ஆனதா?
சுந்தர் சி விலகியதால் தலைவர் 173 திரைப்படத்தை கைவிட உள்ளதாக தகவல் பரவியது. ஏனெனில் இதற்கு முன்னர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ரஜினி, கமல் இருவரும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பின்னர் அப்படம் டிராப் ஆனது. அதனால் தலைவர் 173 படமும் கைவிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் அது உண்மையில்லையாம். சுந்தர் சி வெளியேறினாலும், அப்படம் நிச்சயம் உருவாக உள்ளதாம். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அப்படத்தை இயக்கப்போவது யார் என்பது தான் தற்போது புரியாத புதிராக உள்ளது.
35
தலைவர் 173 யார் இயக்கப்போகிறார்?
ரஜினி கடந்த சில ஆண்டுகளாக விஜய் பட இயக்குனர்களை தான் தன்னுடைய படங்களை இயக்க வைக்கிறார். குறிப்பாக சர்க்கார் முடித்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தர்பார் படத்தில் பணியாற்றினார். அதேபோல் பீஸ்ட் முடிந்ததும் நெல்சன் உடன் ஜெயிலர், லியோ முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் உடன் கூலி என தொடர்ந்து விஜய் பட இயக்குனர்களை டார்கெட் செய்துவரும் ரஜினி, அநேகமாக தலைவர் 173 படத்துக்காக வெங்கட் பிரபு மற்றும் எச்.வினோத் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இவர்கள் இருவருமே ரஜினியை ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குனர்கள் தான்.
வெங்கட்பிரபு ஏற்கனவே அஜித், விஜய் என இருவரையும் இயக்கியவர். அதில் மங்காத்தா பத்தி சொல்லவே வேணாம். கோட் படமாய் கொஞ்சம் சறுக்கினாலும் வசூலில் நல்ல வரவேற்பு தான். இப்போ ரஜினி வாய்ப்பு கிடைச்சா அதையும் சரியா தன் பாணியில் கொஞ்சம் ஜாலியாவும், அதே நேரம் மாஸ் + கிளாஸ் ஆகவும் பண்ணக்கூடியவர். இப்போ சிவகார்த்திகேயன் படத்துக்கான வேலையில் இருந்தாலும் ரஜினி கூப்பிட்டா சிவாவே அனுப்பி வைப்பார். தலைவன் கேட்டு ரசிகன் விடாமலா இருப்பார். அதைவிட ரஜினி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணி அமைந்தால் அது சிவகார்த்திகேயனிற்கே பெரிய மைலேஜா அமையும்.
55
எச்.வினோத்துக்கும் வாய்ப்பு இருக்காம்
அடுத்து எச்.வினோத் என்ன மாதிரியான இயக்குனர்னு சொல்ல தேவையில்லை. தரமான படங்களை இயக்கி பின்னர் அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கினார். கடைசியா துணிவு, அஜித்தை செம்ம ஸ்டைல் & மாஸா காட்டின படம். இப்போ ஜனநாயகன் மூலம் விஜயை இயக்குகிறார். அது பகவந்த் கேசரி ரீமேக்னு சொன்னாலும் அதுல தன்னோட முத்திரையை கண்டிப்பா வச்சுருப்பார். ரஜினி வினோத்துடன் இணைந்தால் அது கண்டிப்பா ஒரு கண்டெண்ட் + மாஸ் படமா அமையும்னு நம்பலாம். ஜனநாயகன் படம் முடிஞ்சு ரிலீசுக்கு தயாராகிட்டதால வினோத்தை கூப்பிட்டாலும் தாராளமா களத்துல இறங்க வாய்ப்பு உண்டு. சுந்தர் சி நழுவவிட்ட வாய்ப்பை யார் தட்டிதூக்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.