துல்கர் சல்மான், ராணா, பாக்யஸ்ரீ போர்சே நடித்த 'காந்தா' இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்ததா? இல்லையா? என்பதை இந்த எக்ஸ் தள விமர்சனத்தில் பார்க்கலாம்.
துல்கர் சல்மான் ஏற்கனவே 'மகாநடி', 'சீதா ராமம்' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களுக்கு நெருக்கமானார். தற்போது அவர் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செல்வாமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் இன்று (நவம்பர் 14) தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை அதன் எக்ஸ் தள விமர்சனம் மூலம் பார்க்கலாம்.
24
காந்தா கதை என்ன?
டி.கே. மகாதேவன் (துல்கர் சல்மான்) ஒரு நடிப்புச் சக்கரவர்த்தியாகப் புகழப்படுகிறார். ஆனால், அவரை வளர்த்துவிட்ட இயக்குநர் அய்யாவுக்கு (சமுத்திரக்கனி) அவரைப் பிடிக்காது. மகாதேவன் தன் பேச்சைக் கேட்காமல் போனதால் அவர் மீது கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில், நின்றுபோன 'சாந்தா' படத்தை மீண்டும் எடுக்க அய்யா ஒப்புக்கொள்கிறார். படத்தின் பெயர் 'காந்தா' என மாற்றப்படுகிறது. படப்பிடிப்பில் நாயகனுக்கும் இயக்குநருக்கும் இடையே ஈகோ மோதல் வெடிக்கிறது. இதற்கிடையில், கதாநாயகி குமாரி (பாக்யஸ்ரீ போர்சே) மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அவரைக் கொன்றது யார்? இந்த வழக்கை புலனாய்வு அதிகாரி போனிக்ஸ் (ராணா டகுபதி) எப்படி கையாண்டார்? இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
34
காந்தா ட்விட்டர் விமர்சனம்
காந்தா படத்தின் முதல் பாதி அருமையாக உள்ளது. ஆனால் இரண்டாம் பாதி ஓகே ரகம் தான். துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்சே ஆகியோர் தரமாக நடித்துள்ளார்கள். படத்தில் நிறைய அருமையான காட்சிகள் உள்ளன. இரண்டாம் பாதியில் யூகிக்கக் கூடிய கதைக்களம், மெதுவாக நகரும் கதைக்களம் பின்னடைவாக உள்ளது. பிஜிஎம் அருமை, மேக்கிங் சூப்பர். மிரர் காட்சி ரசிக்கும்படி உள்ளது. இண்டர்வெல் ட்விஸ்ட் மற்றும் இரண்டாம் பாதியில் துல்கரின் நடிப்பு அனல்பறக்க இருந்தது. டீசண்டான படம், நடிப்புக்காகவே இப்படத்தை பார்க்கலாம் என பதிவிட்டு உள்ளார்.
காந்தா திரைப்படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு சூப்பராக உள்ளது. மிரர் காட்சி, கிளைமாக்ஸ் மற்றும் டேப் நடனம் அட்டகாசம். சமுத்திரக்கனி தன்னுடைய கெரியரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பாக்கியஸ்ரீ போர்சேவின் நடிப்பு ஓகே. ராணா டகுபதி செட் ஆகவில்லை. மேக்கிங்கும் இசையும் அருமை. முதல் பாதி விறுவிறுப்பாக உள்ளது. இரண்டாம் பாதியில் விசாரணை வளையத்துக்குள் கதை செல்லும் போது பொறுமையை சோதிக்கிறது. மொத்தத்தில் காந்தா ஆவரேஜ் படம் தான் என குறிப்பிட்டுள்ளார்.