
Gangers Movie Twitter Review : தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் எடுப்பதில் கில்லாடி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் கேங்கர்ஸ். மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் தமிழ் வெர்ஷனாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சுந்தர் சி. மேலும் இதில் நீண்ட நாட்களுக்கு பின் சுந்தர் சி உடன் இணைந்து வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளிவந்த வின்னர், தலைநகரம் போன்ற படங்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.
கேங்கர்ஸ் விமர்சனம்
கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா ஆகிய இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது கேங்கர்ஸ் படம் மூலம் சுந்தர் சி ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில், கேங்கர்ஸ் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள் படத்தை பற்றிய தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
மணி ஹெய்ஸ்ட் சுந்தர் சி வெர்ஷன்
மணி ஹெய்ஸ்ட்டின் சுந்தர் சி வெர்ஷன் தான் இந்த கேங்கர்ஸ். முதல் பாதி ஓகே-வாக இருந்தாலும் இரண்டாம் பாதி நிறைய காமெடி காட்சிகளுடன் அருமையாக உள்ளது. கிளைமேக்ஸ் காட்சி முரட்டு காமெடியாக உள்ளது. சுந்தர் சி - வடிவேலு காம்போ வேறலெவல். சில எதிர்பாராத ட்விஸ்டுகளும், கேமியோக்களும் அருமையாக உள்ளது. பிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு டீசண்ட் ஆன காமெடி எண்டர்டெயினர் தான் இந்த கேங்கர்ஸ். கண்டிப்பாக பேமிலி ஆடியன்சை இப்படம் கவரும் என பதிவிட்டுள்ளார்.
மறுபடியும் ஹிட்டான சுந்தர் சி - வடிவேலு காம்போ
கேங்கர்ஸ் திரைப்படத்தில் கேத்தரின் தெரசா, டீச்சராக மிளிர்கிறார். சுந்தர் சி மற்றுமொரு ஸ்ட்ராங்கான படத்தை கொடுத்துள்ளார். மறுபடியும் சுந்தர் சி - வடிவேலு காம்போ ஹிட் அடித்துள்ளது. திரைக்கதை அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய பேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் தான் இந்த கேங்கர்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பல கெட்டப்புகளில் சுந்தர்சியுடன் காமெடியில் ரணகளம் பண்ணும் வடிவேலு! 'கேங்கர்ஸ்' ட்ரைலர்!
சுந்தர் சி-யின் ஹாட்ரிக்
சுந்தர் சி-யின் டெம்பிளேட்டான முதல் பாதி, காமெடி நிறைந்த இரண்டாம் பாதி. வடிவேலு தான் படத்தின் ஹைலைட். பாடுகிறார், ஆடுகிறார், சண்டை போடுகிறார், விதவிதமான கெட்டப்புகளில் வருகிறார், 65 வயதில் படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். இது சுந்தர் சி-க்கு ஹாட்ரிக் ஹிட் படம். ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி படங்கள் வருவதற்கு முன் ஆடியன்ஸுக்கு ஒரு நல்ல ட்ரீட் ஆக இப்படம் அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
காமெடி விருந்து
ஒரு சிறிய நகரத்தில் நடக்கும் திருட்டை மையமாக வைத்து சுந்தர் சி தன் ஸ்டைலில் எடுத்துள்ள படம் தான் கேங்கர்ஸ். நிறைய நகைச்சுவை கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உள்ளது. வடிவேலு ஃபுல் பார்மில் நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் காமெடி நிறைந்ததாகவும் கொடுத்துள்ளார். குறிப்பாக ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள் வேறலெவல் என குறிப்பிட்டுள்ளார்.
சம்மருக்கு பக்கா ட்ரீட்
சம்மருக்கு பக்கா ட்ரீட் ஆக அமைந்துள்ளது கேங்கர்ஸ் திரைப்படம். இரண்டாம் பாதியில் சுந்தர் சி-யின் ரைட்டிங் அருமை. காமெடி கிங் வடிவேலு கம்பேக் கொடுத்துள்ளார். ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் சம்பவம் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு சம்மரின் அரண்மனை 4, இந்த ஆண்டு சம்மரில் கேங்கர்ஸ் அருமை என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கைப்புள்ளையுடன் மீண்டும் கைகோர்க்கும் சுந்தர் சி - வெளியான தரமான காமெடி காம்போ அப்டேட்!