கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகும்... அனைவருக்குமே, தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக உள்ள அஜித், விஜய், கமல், ரஜினி போன்ற நடிகர்களை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த வகையில் தளபதி விஜய் அரசியல் பணியில் களமிறங்கி விட்டதால், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவது இல்லை என்பது உறுதி செய்துள்ளார்.
25
Top Directors First choice is Ajith:
முன்னணி இயக்குனர்கள் அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படுகிறார்கள்:
இவரை தொடர்ந்து ரஜினி - கமல் இருவருமே சமீப காலமாக தங்களுடைய வயதுக்கு ஏற்ற போல கதைக்களத்தை தேர்வு ஹீரோவாக நடித்து வருகிறார்கள். எனவே இளம் ஹீரோவாக ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படங்கள், அஜித்தை தேடி தான் அதிகம் செல்கிறது. இது மட்டும் இன்றி 500, 1000 கோடி வசூல் செய்த இயக்குனர்கள் கூட அஜித்தை வைத்து இயக்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
தற்போது அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆன 'குட் பேட் அக்லி' திரைப்படம், திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இந்த படத்தை தொடந்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலில் , அஜித்தின் 64-ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
45
Ajith 65 Movie Director:
அஜித்தின் 65-ஆவது படத்தை இயக்க போகும் இயக்குனர்:
ஆனால் அஜித் தற்போது தன்னுடைய பட பணிகள் பற்றி யோசிக்காமல் முழுக்க முழுக்க... கார் ரேஸில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த பரிசுகளை வாங்கி குவிப்பதில் மட்டுமே அஜித் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அஜித்தின் 65-ஆவது படத்தை இயக்க போகும் இயக்குனர் பற்றிய தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதன்படி, ஏற்கனவே அஜித் குமார் தனது 65வது படத்தில் 'கேஜிஎஃப்' இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைகிறார் என கூறப்பட்டது.
இருவருக்கும் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அட்லீயும் அஜித்துக்கு 3 கதைகள் கூறியுள்ளதாக கூறிய நிலையில், அட்லீயின் பெயரும் இந்த லிஸ்டில் இணைந்தது. இதை தொடர்ந்து 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் ஏகே 65-ஆவது படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சுகுமார் அஜித்தை வைத்து படம் இயக்க ஆர்வம் உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து இந்த வதந்தி பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.