ரம்யா சுப்பிரமணியன்:
தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகையும் விஜேவுமான ரம்யா சுப்பிரமணியன். மொழி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரம்யா சுப்பிரமணியனுக்கு மங்காத்தா படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்து வெளியான படங்கள் தான் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத்தலைவன், ரசவாதி என்று பல படங்களில் நடித்த ரம்யா சுப்பிரமணியன் கடைசியாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி படத்தில் நடித்தார்.