சன் டிவி சீரியல் நடிகை ஸ்ரிதிகாவுக்கு குழந்தை பிறந்தாச்சு - என்ன குழந்தை தெரியுமா?

Published : May 05, 2025, 12:10 PM IST

38 வயதாகும் சீரியல் நடிகை  ஸ்ரிதிகா கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

PREV
15
சன் டிவி சீரியல் நடிகை ஸ்ரிதிகாவுக்கு குழந்தை பிறந்தாச்சு - என்ன குழந்தை தெரியுமா?
Srithika - SSR Aaryann Blessed Girl Baby:

சன் டிவியில் ஒளிபரப்பான 'கலசம்' சீரியல் மூலம் சீரியல் நடிகையாக மாறியவர்  ஸ்ரிதிகா. ஆனால் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுத் தந்தது, 2010 முதல் 2015-வரை இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் தான். இதன் பின்னர் மாமியார் தேவை, உறவுகள் சங்கமம், வைதேகி, உரிமை, குலதெய்வம், என் இனிய தோழியே உள்ளிட்ட ஏராளமான 15-க்கும் மேற்பட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.
 

25
ஸ்ரிதிகா நடித்த திரைப்படங்கள்:

சீரியல்கள் மட்டும் இன்றி, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வெண்ணிலா கபடி குழு, வேங்கை போன்ற திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். எதிர்பார்த்த அளவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், முழுக்க முழுக்க சீரியல் நாயகியாக மாறினார்.

35
விவாகரத்துக்கு பின் நடந்த ஸ்ரிதிகா - ஆரியன் திருமணம்:

இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட  ஸ்ரிதிகா இரண்டே வருடத்தில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். மேலும் மகராசி சீரியலில் நடித்த ஆரியனுடன் இவருக்கு ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு, எளிமையாக ரிஜிஸ்டர் ஆபிசில் திருமணம் செய்து கொண்டனர்.

45
ஒன்று கூடி வாழ்த்திய சின்னத்திரை பிரபலங்கள்:

அதன் பின்னர், நடந்த திருமண வரவேற்பில் ஒட்டு மொத்த சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்த பலர் கூடி வந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தகவலை  ஸ்ரிதிகா அறிவித்த நிலையில், தற்போது குழந்தை பிறந்ததையும் அறிவித்துள்ளார். 

55
ஸ்ரிதிகாவுக்கு பெண் குழந்தை:

  ஸ்ரிதிகா - ஆரியன் ஜோடிக்கு, ஏப்ரல் 28-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதுள்ளாக ஸ்ரிதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories