சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

First Published | Oct 25, 2020, 12:37 PM IST

ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த சீரியலை விரைவில் நிறுத்த சன் தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாம்.

சன் தொலைக்காட்சியில் 1999 முதல் 2001ம் ஆண்டு வரை ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொலைக்காட்சி முன்பு காட்டி போட்டு சீரியல் “சித்தி”. ராதிகா இரட்டை வேடத்தில் தோன்றிய இந்த சீரியல் அப்போது மிகவும் பிரபலமானது.
இதையடுத்து 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தி - 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நிழல்கள் ரவி, மஹாலட்சுமி , அஞ்சு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
Tap to resize

கொரோனா பிரச்சனை காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சித்தி 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில் ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த சீரியலை விரைவில் நிறுத்த சன் தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாம்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூட என்று பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதற்கு ஆதரவாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
அதில், " பிரபல சன் ரைசஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் முத்தையா முரளிதரனை யாரும் கேள்வி கேட்ட வில்லை, ஆனால் விஜய் சேதுபதி மட்டும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கூடாதா" என பதிவிட்டிருந்தார்.
சன் தொலைக்காட்சியின் உரிமையாளரான கலாநிதி மாறன் தான், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் உரிமையாளர். ராதிகாவின் இந்த ட்விட்டர் பதிவால் சோசியல் மீடியாவில் கலாநிதி மாறனுக்கு எதிராக கருத்துக்கள் பரவின.
இதனால் கடுப்பான சன் தொலைக்காட்சி நிர்வாகம் சித்தி 2 சீரியலை விரைவில் நிறுத்திக் கொள்ளும் படி ராதிகாவின் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

click me!