நடிகை மஞ்சுளா - நடிகர் விஜயகுமார் தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வனிதா, ஹீரோயினாக சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தவர் அதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. 2 முறை திருமணம் செய்து கொண்ட வனிதா இருவரையுமே டைவர்ஸ் செய்துவிட்டார்.
உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது. அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அதன்பின்னர் தனது மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவிற்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் மீண்டும் பிரபலமானார்.
அதையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகள், யூ-டியூப் சேனல் என மிகவும் பிசியாக வலம் வந்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலின் குடிப்பழக்கம் காரணமாக வனிதா அவரை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. தற்போது பீட்டர் பால் தன்னுடன் இல்லை என்றும், குடியால் அவரை பிரிந்ததாகவும் வனிதா தெரிவித்திருந்தார்.
பிக்பாஸ், பீட்டர் பால் திருமணம் மற்றும் பிரிவு ஆகிய சமயங்களில் எல்லாமே சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தவர் வனிதா. தற்போது பீட்டர் பால் உடனான பிரிவால் வனிதா மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வனிதா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ள வனிதா இன்று கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.