” இதை நான் எதிர்பார்க்கல” நியூயார்க்கில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் குறித்து ஃபர்ஹானா நெகிழ்ச்சி

First Published | Aug 10, 2023, 11:20 AM IST

ஃபர்ஹானா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் ஜீபா ஷெரின், சீரியலிலும் இவர் முஸ்லீம் பெண்ணாகவே நடித்து வருகிறார்.

பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரில் சத்யப்பிரியா, மாரிமுத்து, பிரியதர்ஷினி, கனிகா, ஹரிப்பிரியா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


குறிப்பாக நடிகர் மாரிமுத்து நடித்துள்ள குணசேகரன் கதாப்பாத்திரம் ரசிகர்களின் அமோக வரவேற்பை  பெற்றுள்ளது.

இந்த சீரியலில் ஜீவானந்தமாக நடித்து வரும் இயக்குனர் திருச்செல்வத்தின் பி.ஏவாக பர்ஹானா என்ற கேரக்டரில் முஸ்லீம் பெண் நடித்து வருகிறார்.

ஃபர்ஹானா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் ஜீபா ஷெரின், சீரியலிலும் இவர் முஸ்லீம் பெண்ணாகவே நடித்து வருகிறார்.

முதல்முறையாக சீரியலில் ஹிஜாப் அணிந்து நடிக்கும் முஸ்லீம் நடிகை  நான் தான் என்று பெருமிதத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் ஜீபா.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள முக்கிய வீதியில் ஜீபாவின் வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரில் பகிர்ந்துள்ள ஜீபா “ இந்த அன்பை இந்த உலகத்திடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Latest Videos

click me!