டாப் 5 நடிகர்கள் பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது வித்தியாசமான படங்களையும், கதைக்களத்தையும் தேர்வு செய்து நடிப்பில் அசத்தி வருகிறார். சின்ன திரையில் இருந்து வந்த ஒரு பிரபலம் இந்த அளவிற்கு வளர்ந்துவிட்டாரா? என பல வருடமாக முன்னணி இடத்தை பிடிக்க போராடி வரும் பிரபலங்கள் சிலர் மூக்கு மீது விரல் வைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
தற்போது இவர் நடித்து வரும் படங்களுக்கு சுமார், 20 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
இவர் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்த்து, டான், மற்றும் அயலான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, சன்டிவி நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு சுமார் 75 லட்சம் சம்பளம் பேசி வழிய வந்து சூப்பர் ஆஃப்பர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இரண்டு வருடத்தில், சிவகார்த்திகேயன் சன் பிச்சர் நிறுவனத்திற்கு 5 படங்கள் நடித்து கொடு ரூ.75 கோடி சம்பளம் கொடுப்பதாக அணுகியுள்ளதாம்.
இந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் பயன்படுத்தி கொண்டால், இந்த 5 படங்களை இயக்கம் இயக்குனர்கள் யார் என்பது தான் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது. இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட் படங்களான 'அண்ணாத்த' மற்றும் 'தளபதி 65 ' ஆகிய படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.