Anirudh - Kavya Maran Marriage : அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் திடீர் மாற்றம்?

Published : Oct 22, 2026, 06:02 PM IST

Anirudh - Kavya Maran Wedding Plan : இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறனை கரம்பிடிக்க உள்ள நிலையில், அவர்களது திருமண பிளானில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாம்.

PREV
14
Anirudh - Kavya Maran Wedding Plan

கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது அனிருத் - காவ்யா மாறன் திருமணம் தான். இவர்கள் இருவரும் வருகிற நவம்பர் மாதம் 11ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதையடுத்து இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ந் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. தற்போது திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திருமணத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி பல மாநில முதல்வர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தட்டுச் சாப்பாடு ரூ.35,000? ரூ.100 கோடியில் திருமணமா? காவ்யா மாறன் - அனிருத் திருமணம் பற்றி தீயாய் பரவும் தகவல்

24
திருமண வரவேற்பு எப்போது?

இதனிடையே அனிருத் - காவ்யா மாறன் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்றும், நவம்பர் 21ந் தேதி நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் தான் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது. இதுதவிர மேலும் இரண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் பரவி வந்தது.

அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம்... அழைப்பிதழ் உடன் முதல்வர் வீட்டுக்கு விசிட் அடித்த கலாநிதி மாறன்!

34
திருமண பிளானில் ஏற்பட்ட மாற்றம்

ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவல்படி, அனிருத் - காவ்யா மாறன் திருமணத்திற்கு பின் சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட ரிஷப்சனில் தான் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் படையெடுத்து வந்து கலந்துகொள்ள உள்ளார்களாம். இதையடுத்து அனிருத் தரப்பிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது வரவேற்பு நிகழ்ச்சி இல்லையாம். அனிருத், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காக மட்டும் ஒரு கெட் டுகெதர் ஏற்பாடு செய்துள்ளாராம். இது நவம்பர் 22ந் தேதி ஐடிசி சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளதாம்.

Anirudh : மாஸ் இசைக்கு நடுவே அனிருத் நிகழ்த்திய மெலடி மேஜிக்... காதலில் உருக வைத்த ராக்ஸ்டாரின் டாப் 10 மெலடி ஹிட்ஸ்!

44
விருந்து கொடுக்கப்போகிறாரா கலாநிதி மாறன்?

இதுதவிர கலாநிதி மாறன் தன்னுடைய சன் குழும ஊழியர்களுக்காக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் தற்போதைக்கு அது இன்னும் கன்பார்ம் ஆகவில்லையாம். அநேகமாக தன்னுடைய சன் நிறுவன ஊழியர்களுக்கு பிரம்மாண்ட விருந்து கொடுக்க கலாநிதி மாறன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் - காவ்யா மாறன் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதால், கலாநிதி மாறன், ரஜினிகாந்தின் உறவினர் ஆகப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anirudh : அனிருத் - காவ்யா மாறன் திருமணம் எந்த நாட்டில் நடக்கப்போகுது தெரியுமா? லீக்கான கல்யாண தேதி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories