தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். பல ஆண்டுகளாக இவரது அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் கடந்த 44 ஆண்டுகளாக நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி வருகிறார்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா ஒரு நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துகொண்டார். அகரம் அறக்கட்டளையின் உதவியுடன் மருத்துவம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது உலக சுகாதார மையத்தில் பணியாற்றி வருவதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார். அகரம் மூலம் பயின்று டாக்டர் ஆன முதல் மாணவரான அவரின் வளர்ச்சி வியப்பளிப்பதாக சூர்யா பேசுகையில் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அவசியம், கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள். வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதையும் தாண்டி புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். தன்னார்வலர்களால் தான் இன்று அகரம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அரசும் அகரத்திற்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது” என சூர்யா அதில் பேசினார்.
இதையும் படியுங்கள்... எல்லாம் உனக்காக சகோ.. தம்பி எல்வினுடன் களமிறங்கும் ராகவா லாரன்ஸ் - அதிவேகமாக வரும் Bullet!