STR on CM Vijay: அரசியல் பிரவேசம் எப்போது.! சூசகமாக பதில் சொன்ன சிம்பு.! என்ன சொன்னார் தெரியுமா?!

Published : Aug 20, 2026, 06:39 AM IST

STR on CM Vijay: நடிகர் சிலம்பரசன், முதல்வர் விஜய்யின் ஆட்சி மற்றும் மக்கள் நம்பிக்கை குறித்து பேசியுள்ளார். மேலும், அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

PREV
17
முதவல்வர் விஜய் என் சகோதரன்

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் (STR) தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. விஜய்யின் செயல்பாடுகள் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்திய சிலம்பரசன், “இப்போதைக்கு என் சகோதரன் நன்றாக செயல்படுகிறார். அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

27
விஜய் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெற்றி மாலை சூட்டியது

விஜய் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தேர்தல் முடிவுகளில் தெளிவாக வெளிப்பட்டதாகவும் சிலம்பரசன் குறிப்பிட்டுள்ளார். விஜய்யை நேரில் பார்த்ததும், அவரது அணுகுமுறையையும் செயல்பாடுகளையும் கவனித்ததும் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே விஜய் முதலமைச்சராகியுள்ளதாகவும் சிலம்பரசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

37
விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் கருத்து

மேலும், “CM விஜய் ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை” என்றும் சிலம்பரசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வரும் சூழலில், விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் கூறியதாக வெளியாகியுள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

47
வெளிப்படையாக பேசிய எஸ்டிஆர்

சினிமா துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சிலம்பரசன், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். அந்த வகையில், விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

57
அரசியல் பிரவேசம் எப்போது?

இதனிடையே, சிலம்பரசனிடம் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த அவர், “டைம் இருக்கு” என்று தெரிவித்துள்ளார். சிலம்பரசனின் இந்த பதில், எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

67
விஜய் மக்களுக்கு சேவை செய்யட்டும்

அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய சிம்பு, தற்போது விஜய் இருக்கும் போது தற்போது நான் எதற்கு என சிரித்தார். பின்னர் தனது சகோதரன் என விஜய்யை குறிப்பிட்டு, அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

77
அதுக்கு டைம் இருக்கு பாஸ்.!

விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் கருத்துகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் சிலம்பரசனின் சமீபத்திய பேச்சும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, “டைம் இருக்கு” என்ற அவரது பதில், எதிர்காலத்தில் அரசியலில் சிலம்பரசனின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வியை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories