சிம்பு - சந்தானம் இடையே மோதலா? STR 49 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது ஏன்?

Published : Jun 17, 2025, 11:14 AM IST

சிம்புவின் STR 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக அப்படத்தை வெற்றிமாறன் இயக்க கமிட்டாகி உள்ளார்.

PREV
14
STR 49 Film Director Changed

நடிகர் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு அப்பட்டத்திற்கு பூஜையும் போடப்பட்டது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரென இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதால் எஸ்.டி.ஆர் 49 படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி இப்படக்குழுவுடன் சிம்புவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

24
சிம்பு - சந்தானம் இடையே மோதலா?

எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்தில் சிம்பு உடன் சந்தானமும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் இப்படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படத்தில் சிம்புவுக்கு நிகராக தனது கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்பன போன்ற சில கண்டிஷன்களை சந்தானம் போட்டதாகவும், இதனால் சிம்புவுக்கும் அவருக்கும் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு படத்தை கிடப்பில் போட சிம்பு முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

34
எஸ்.டி.ஆர் 49 இயக்குனர் மாற்றம்

அதுமட்டுமின்றி எஸ்.டி.ஆர் 49 படத்துக்காக ராம்குமார் கொடுத்த பைனல் ஸ்கிரிப்டில் சிம்புவுக்கு திருப்தி இல்லையாம். இப்படி அப்படத்தில் பல சிக்கல்கள் இருந்ததால் அதை கிடப்பில் போட முடிவெடுத்த சிம்பு இயக்குனரை மாற்றினாராம். இதனால் இயக்குனர் ராம்குமார் தற்போது வேறு ஹீரோக்களிடம் கதை கூறி வருகிறாராம். சிம்பு அடுத்தடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து உடன் ஒரு படம் என பிசியாக உள்ளதால் ராம்குமார் இயக்கத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறி தான் என கூறப்படுகிறது.

44
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி

எஸ்.டி.ஆர் 49 படத்தை தற்போது வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறாராம். இது வடசென்னையில் நடக்கும் கதையாம். கென் கருணாஸுக்காக எழுதிய ராஜன் வகையறா என்கிற கதையை தான் தற்போது சிம்புவை வைத்து எடுக்கிறாராம் வெற்றிமாறன். இப்படத்தில் கவின், இயக்குனர் நெல்சன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories