
ஓடிடி தளங்களின் மின்னல் வேக வளர்ச்சியால் தற்போது புதுப்படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்து வருகிறது. தற்போதைய சூழல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. அதனாப் புதுப்படங்களை ஓடிடியில் பார்க்கவே மக்கள் முனைப்பு காட்டி வருகிறர்கள். தியேட்டருக்கு சென்றால் டிக்கெட் செலவு, பார்க்கிங் செலவு, ஸ்நாக்ஸ் செலவு என பல ஆயிரம் செலவாகிவிடும். அதற்கு வீட்டிலேயே பேமிலியோடு ஓடிடியில் பார்த்துவிடலாம் என்கிற மனநிலைக்கு மக்கள் மாறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஜூன் 9ந் தேதி முதல் ஜூன் 15ந் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிகம் வியூஸ் அள்ளிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பார்க்கலாம்.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்தை கடந்த வாரம் மட்டும் 33 லட்சம் வியூஸ் பெற்றூள்ளது. அதேபோல் ராஜ்குமார் ராவ் நடித்த இந்தி திரைப்படமான bhool chuk maaf நான்காம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இப்படம் 46 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் வெளியாகி உள்ள பட்டியலில் 53 லட்சம் பார்வைகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இதையடுத்து முதல் இரண்டு இடங்களை இந்தி படங்கள் தான் பிடித்துள்ளன. இரண்டாம் இடத்தில் 57 லட்சம் வியூஸ் உடன் அக்ஷய் குமாரின் கேசரி சாப்டர் 2 படம் உள்ளது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. முதலிடத்தில் ஜாட் திரைப்படம் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 63 லட்சம் வியூஸ் அள்ளி உள்ளது.
அமேசான் எம்.எக்ஸ். பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் கேமர்லாக் வெப் தொடர் 16 லட்சம் பார்வைகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக 22 லட்சம் வியூஸ்களுடன் Lafangey என்கிற வெப் தொடர் நான்காம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் அமேசான் எம்.எக்ஸ். பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
The Traitors என்கிற இந்தி வெப் தொடர் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 27 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. அதேபோல் ராணா டகுபதி, வெங்கடேஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ராணா நாயுடு சீசன் 2 வெப் தொடர் 32 லட்சம் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. Criminal Justice: A Family Matter என்கிற வெப் தொடர் 53 லட்சம் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.