உயிர் பலி கேட்கும் காந்தாரா? உயிர் தப்பிய ரிஷப் ஷெட்டி.. அச்சத்தில் படக்குழுவினர்

Published : Jun 17, 2025, 09:58 AM IST

‘காந்தாரா 2’ படத்தில் பணியாற்றி வரும் கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் தற்போது படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

PREV
15
Kantara: Chapter 1 Movie

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி நடிப்பில், ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இது இந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பணியாற்றி வரும் கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது.

25
அடுத்தடுத்து உயிரிழந்த கலைஞர்கள்

‘காந்தாரா 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கேரள ஜூனியர் ஆர்டிஸ்ட் கபில் படப்பிடிப்பின் இடைவெளியின் போது சௌபர்ணிகா ஆற்றில் குளிக்கச் சென்றார். அங்கு அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் ராகேஷ் பூஜாரி (33) நண்பரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் ‘காந்தாரா 2’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்தபடியாக மிமிக்ரி கலைஞரும், நடிகருமான விஜூ மாரடைப்பால் காலமானார். அவர் ஜூனியர் கலைஞர்களுக்கான விடுதியில் தங்கி இருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

35
ரிஷப் ஷெட்டி சென்ற படகு கவிழ்ந்து விபத்து

தொடர்ந்து நடக்கும் அசம்பாவித சம்பவங்களால் படக்குழுவினர் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 2025-ல் ரிஷப் ஷெட்டியுடன் 30 பேர் கொண்ட படக்குழுவினர் ஷிவ்மோகா மாவட்டத்தின் மாணி நீர்த்தேக்கத்தில் படப்பிடிப்புக்காக சென்றனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்துள்ளது. ஆழமற்ற பகுதியில் படகு கவிழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர். இருப்பினும் கேமரா மற்றும் பிற படப்பிடிப்பு உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதற்கு முன்பாக நவம்பர் 2023 ஆம் ஆண்டு 20 ஜூனியர் கலைஞர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் மூடூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனக்கூறப்பட்டது. மற்றொரு நாள் எதிர்பாராத கனமழை மற்றும் காற்றால் படத்திற்காக அமைக்கப்பட்ட விலை உயர்ந்த செட் சேதமடைந்தது. இதனால் படக்குழுவினருக்கு ரூ.3 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

45
முதல் பாகத்திலிருந்து தொடரும் சர்ச்சைகள்

‘காந்தாரா’ முதல் பாகம் வெளியான போதே பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற “வராஹ ரூபம்..” பாடல் கேரளாவை சேர்ந்த ‘தாய்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழுவின் “நவரசம்..” பாடலை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. “வராஹ ரூபம்..” பாடலை படத்தில் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டது அதைத்தொடர்ந்து இயக்குனர் ரிஷப் செட்டி பூதகோலா நடனம் இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. பூதகோலா நடனம் ஆதிவாசிகளின் களைய என்றும், இந்து சமயம் இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பே ஆதிவாசிகள் இங்கு இருந்தனர் என்றும் கன்னட நடிகர் சேர்த்தன்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

55
‘காந்தாரா 2’ திட்டமிட்டபடி வெளியாகுமா?

‘காந்தாரா’ படம் தொடங்கியதிலிருந்து பல அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் இந்த படத்தில் நடிக்கவே படக்குழுவினர் பயப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை அக்டோபர் 2, 2025 வெளியிடப்படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து நடக்கும் துயரச் சம்பவங்களால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories