Top10 Kollywood Celebrities: விஜய் சேதுபதியை முந்திய யோகிபாபு! லிஸ்டில் காணாமல் போன அஜித்! முதல் இடத்தில் யார்

Published : Dec 15, 2021, 06:57 PM IST

இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டின் டாப் 10 நடிகர், நடிகைகள், திரைப்படங்கள், டாப் 10 பாடல்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்தடுத்து நாளிதழ்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்டார் டோமைன் என்கிற ஆங்கில நாளிதழ் தற்போது , இந்த வருடத்தின் டாப் 10 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

PREV
110
Top10 Kollywood Celebrities: விஜய் சேதுபதியை முந்திய யோகிபாபு! லிஸ்டில் காணாமல் போன அஜித்! முதல் இடத்தில் யார்

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), இவர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் கெத்து காட்டியது. எனவே சூப்பர் ஸ்டார் இந்த நாளிதழின் கணிப்பின் படி முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

210

இரண்டாவது இடத்தில் தளபதி விஜய் (Vijay) உள்ளார். கொரோனா பிரச்சனைக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் தான் பல ரசிகர்களை திரையரங்கிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

310

மூன்றாவது இடத்தில் தேசிய விருது நடிகர் தனுஷ் உள்ளார். இவர் நடிப்பில் வெளியான அசுரன், கர்ணன் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

410

நான்காவது இடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா, தமிழில் அடுத்தடுத்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு ஓடிடியில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் சர்ச்சைகளை சந்தித்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

510

ஒரே ஒரு ஹிட் கொடுத்து, ஒட்டு மொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் சிம்பு தான் 5 ஆவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இப்படம் குறுகிய நாட்களிலேயே கோடி கணக்கில் வசூலை அள்ளி வருகிறது.

610

6 ஆவது இடத்தில் உள்ளவர் சார்பட்டா நாயகன் ஆர்யா தான். பல வருடங்களாக ஒரே ஒரு ஹிட் கொடுக்க போராடி வந்த இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது சார்பாட்டா.

710

இவரை தொடர்ந்து 7 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளவர், பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தான். இவர் ஹீரோவாக நடித்த போது கூட கிடைக்காத வெற்றியும் பாராட்டும் வில்லனாக நடித்து வரும் போது கிடைத்துள்ளது.

810

சிவகார்த்திகேயன் தான் 8 ஆவது இடத்தில் உள்ளார். அதிக சம்பளம் பெரும் நடிகர்கள் பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயன் இருந்தாலும், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிந்தாலும் இவருக்கு 8 ஆவது இடமே, இந்த நாளிதழின் கணிப்பில் கிடைத்துள்ளது.

910

9 ஆவது இடத்தில் இருப்பவர் நடிகர் காமெடி நடிகர் யோகி பாபு தான். தல அஜித்துக்கே இந்த நாளிதழின் கணிப்பில் இடம் இல்லாத போது, யோகி பாபு இடம்பிடித்திருப்பது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

1010

10 ஆவது இடத்தில் இருப்பவர், அடுத்தடுத்து தன்னுடைய படங்களை ரிலீஸ் செய்து வரும் விஜய் சேதுபதி தான். இவர் நடிப்பில் தான் கொரோனா பிரச்சனைக்கு பின் அதிக படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories