இந்திய திரையுலகிற்கே சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். அவருக்கு தற்போது 72 வயது ஆன போதிலும் இன்றளவும் அதே சுறுசுறுப்போடு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர் வரிசை கட்டி நிற்கின்றனர். அவர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இரு தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இவ்வளவு பெரிய உச்சத்தை தொட நடிகர் ரஜினிகாந்த் அவ்வளவு எளிதில் வளர்ந்துவிடவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் அவர் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. அதையெல்லாம் கடந்து தான் இன்று மிகப்பெரிய நடிகராக உயர்ந்து நிற்கிறார். பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் சினிமாவுக்குள் வந்தது ஒரு எதிர்பாரா நிகழ்வாக இருந்தாலும், அதன்பின் அதில் முன்னேற அவர் செய்த கடின உழைப்பு தான் இன்று இந்த அளவுக்கு உயரத்தை தொட வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... 72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான போட்டோஸ் இதோ
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நிச்சயம் ரஜினிகாந்தின் பெயர் டாப் 5 இடத்துக்குள் இருக்கும் அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது இவ்வளவு சம்பளம் வாங்கும் ரஜினி, ஆரம்ப காலகட்டத்தில் அறிமுக ஹீரோயினை விட கம்மியான சம்பளம் வாங்கி இருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை, ஸ்ரீதேவி தான்.
நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரம் முதல் சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தையாக நடித்தபோது இருந்த அதே மவுசுடன் தான் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி, அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் மூன்று முடிச்சு. கே.பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீதேவி உடன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் நடிக்க தான் நடிகை ஸ்ரீதேவி ரஜினியை விட டபுள் மடங்கு அதிகம் சம்பளம் வாங்கி இருக்கிறார். இப்படத்திற்காக ரஜினிக்கு ரூ.2 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஸ்ரீதேவிக்கோ ரூ.5 ஆயிரம் வழங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் நடிகர் கமல்ஹாசன் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்கிறாராம். அப்போது புதுமுகமாக இருந்த ரஜினிக்கு அனுபவமிக்க நடிகரான கமலைப்போல் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்க ஆசைப்பட்டாராம். இந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ஸ்ரீதேவி, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மொட்டை பாஸ் லுக்கில் மிரட்டும் பகத் பாசில்... ‘புஷ்பா 2’ படக்குழுவின் டெரரான பர்த்டே சர்ப்ரைஸ்