பகல் நிலவு சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி. அதில் அசீமுக்கு ஜோடியாக நடித்த ஷிவானி அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஒரு கட்டத்தில் சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட ஷிவானி, சினிமாவில் நுழைய முடிவெடுத்தார். அதற்கான வாய்ப்புகளைப் பெற பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு தளமாக பயன்படுத்திக் கொண்டார்.