rekha nair
இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பியவர் ரேகா நாயர். மனதில் பட்டதை ஓப்பனாக பேசக்கூடிய இவர், சமீப காலமாக யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஆண்கள் இடுப்பில் கை வைத்தால் அனுபவிக்கனும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை ரேகா நாயர், தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது : “பிளஸ் 2 முடிச்சி காலேஜ் போகும்போதே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அப்போ எனக்கு 17 வயசு. அந்த திருமணம் சீக்கிரமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். தெரியாத வயசுல அந்த முதல் திருமணம் நடந்துவிட்டது. என்னுடைய குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டதால், நான் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. நானும் ரொம்ப கஷ்டப்பட்டு பேப்பர் போட்டு தான் வளர்ந்து வந்தேன்.
இதையும் படியுங்கள்... மலையாள மாஸ் ஹீரோ... தமிழ்நாட்டில் பேமஸ் ஆனது எப்படி? பகத் பாசில் நடித்த தரமான தமிழ் படங்கள் - ஒரு பார்வை
அந்த சமயத்தில் என்னுடைய பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் இருந்தது. என் அப்பாவும், அம்மாவும் யாரை கல்யாணம் பண்ண சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் என மனநிலை வந்ததற்கு காரணம் என்னவென்றால், 2 பவுன் நகைகூட வாங்கி கல்யாணம் பண்ணி வைக்கும் சூழ்நிலை இல்லை. எங்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தாலும், அதன்மூலம் தான் ஏதோ வருமானம் வருகிறது என்பதால் எந்த மாப்பிள்ளையாக இருந்தாலும் சரினு சொல்லிதான் முதல் திருமணம் செய்துகொண்டேன்.
கல்யாணம் பண்ணி 18 வயசுலயே எனக்கு குழந்தை பிறந்திருச்சு. என் மகள் பிறக்கும் போதே என்னுடைய கணவர் என்னுடன் இல்லை. நான் கோயம்புத்தூரில் காலேஜ் படிக்கும்போது குழந்தை பிறந்ததால், கேரளாவில் உள்ள என் பெற்றோருக்கு லெட்டர் மூலம் செய்தி அனுப்பினேன். அந்த சமயத்தில் போன் வசதி இல்லாததால் லெட்டர் போட்டேன். அதுக்கப்புறம் தான் அவங்க வந்து குழந்தையை கூட்டிட்டு போனாங்க. குழந்தை திருமணத்தை தடுக்கனும்னு ஒரு அறிவுகூட எனக்கு அந்த நேரத்தில் இல்லை.