சர்ச்சை நாயகிக்கு அடித்தது ஜாக்பாட்... சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி...!

First Published | Feb 12, 2021, 6:32 PM IST

தற்போது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. 

ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார்.
அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்தினார். மேலும் ராணாவின் தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
Tap to resize

அதே போல் கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார்.
மற்ற நடிகைகள் எல்லாரும் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தால் ஸ்ரீரெட்டி முகநூலில் படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக சமையல் வீடியோ, சரக்கடிக்கும் போட்டோ என எதையாவது பதிவிட்டு வருகிறார். மேலும் டபுள் மீனிங்கில் சில நடிகர், நடிகைகளை விமர்சிக்கவும் செய்தார்.
தற்போது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதாவது தமிழ் சினிமாவில் மறைந்த கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராக உள்ள படத்தில் ஸ்ரீரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குநரான மது இயக்கவுள்ளார் என்றும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.எனக்கு அப்பா, அம்மா எல்லாமே நீங்க இந்த படம் நல்ல படியாக முடிந்து வெளியே வரவேண்டும் என என்னை ஆசீர்வாதாம் செய்யுங்கள் என்றெல்லாம் தமிழில் பேசி ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

Latest Videos

click me!