SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?

Published : Jun 09, 2026, 02:28 PM IST

SPB Song Secret : எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகர் அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல் ஒன்று அவருக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
SPB Song Secret

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அஜித்தின் திரைப்பயணத்தின் தொடக்கத்தில் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அஜித்தின் பள்ளித் தோழராக இருந்தவர் எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண். அந்த நட்பின் மூலமாகவே தெலுங்கில் உருவான பிரேம புஸ்தகம் திரைப்படத்தில் நடிக்க அஜித்தை எஸ்.பி.பி பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

25
அஜித்துக்கு உதவிய எஸ்பிபி

அதன்பின்னர் தமிழில் அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித், இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது ஆரம்பகால படங்கள் பலவற்றில் எஸ்.பி.பி பின்னணிப் பாடல்கள் பாடி பெரும் ஆதரவாக இருந்தார். குறிப்பாக அன்னமே அன்னமே போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும் உல்லாசம் திரைப்படத்தில் அஜித்தின் தந்தை கதாபாத்திரத்திலும் எஸ்.பி.பி நடித்திருந்தார்.

35
அந்த பாடல் எது?

இந்த நிலையில், அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்ற “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடல் உருவான பின்னணி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இயக்குநர் சரண் மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ், கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற “மண்ணில் இந்த காதலன்றி” பாடலின் தனித்துவத்தைப் போலவே, மூச்சு விடாமல் பாடப்படும் வகையில் இந்தப் பாடலையும் அமைக்க விரும்பியதாக கூறப்படுகிறது.

அதற்கேற்ப எஸ்.பி.பி தனது குரல் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, அதிக உயர்தர ஸ்ருதியில் பாடலை பதிவு செய்தாராம். பாடலின் கடினத்தன்மையை கருத்தில் கொண்டு சில இடங்களில் சுவாச இடைவெளிகளையும் பயன்படுத்திக் கொண்டாராம்.

45
கவிதையில் இருந்து உருவான பாடல்

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” மற்றும் “மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு” ஆகிய இரு பாடல்களும் முதலில் திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. கவிஞர் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற வரிகளை தேர்வு செய்து, பின்னர் இசையமைத்து பாடல்களாக மாற்றியிருந்தனர்.

55
எஸ்பிபி-க்கு சிக்கல்

பாடல் பதிவு முடிந்தபின் இசையமைப்பாளர் பரத்வாஜிடம் எஸ்.பி.பி நகைச்சுவையாக ஒரு கருத்தை பகிர்ந்தாராம். “இந்தப் பாடல் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ஆனால் எனக்கு தான் சிக்கல். இனிமேல் நான் செல்லும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் இந்தப் பாடலை ஒன்ஸ்மோர் கேட்கப் போகிறார்கள். நான் என்ன செய்யப்போறேனோ” என்று கலகலப்பாக கூறினாராம். அவர் கணித்ததுபோலவே அமர்க்களம் திரைப்படமும் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடல், இன்றளவும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கெரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories