கொரோனா அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. அங்கு 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பியின் உடல் நிலை தொடக்கத்தில் மோசமடைந்தாலும், கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் முன்னேறி வந்தது.
கடந்த 4ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இதனால் எஸ்.பி.பி. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என அனைவரும் காத்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.
ஆனால் இன்று மதியம் சரியாக 1.04 மணிக்கு எஸ்.பி.பி. நம்மை விட்டு பிரிந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் முயன்ற போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
51 நாட்களாக மருத்துவமனையில் போராடிய எஸ்.பி.பி.யின் இறுதி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்களாக மயக்கத்தில் இருந்து கண் விழித்த எஸ்.பி.பி பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சைக்கள் அளிக்கப்பட்டு வந்தது. அப்படி எஸ்.பி.பி. பாலசுப்ரமணித்திற்கு மருத்துவர்கள் பிசியோதெரபி கொடுக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.