கார்த்தியின் வித்யாசமான நடிப்பில் வெளியாகியிருந்த காஷ்மோரா படத்தில் நயன்தாரா இளவரசியாக நடித்திருப்பார். தனக்கு கிடைக்கும் வேடங்களை சேலஞ்சாக எடுத்துக் கொண்டு அதில் மாஸ் கட்டுவதால் தான் நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என பெயர். இந்த படத்தில் பறந்து பறந்து வால் சண்டையிடும் நயன்தாராவை ரசிகர்கள் வெகுவாகவே பாராட்டி வந்தனர். கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த காஷ்மோரா படம் கோகுல் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.