குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறிய நடிகைகள்..

First Published | Aug 14, 2024, 10:38 AM IST

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோலிவுட் திரையுலகில் பல பிரபலங்கள் குழந்தை நட்சத்திரங்களாக தங்கள் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். ஸ்ரீதேவி, மீனா, ஷாலினி போன்ற நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி எவர்கிரீன் நடிகைகளாக மாறினர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Manjima Mohan

மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன் 1997 மற்றும் 2001 வரைபல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், 2015 இல் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

Latest Videos


Nithya Menon

நித்யா மேனன்

நித்யா மேனன் தென்னிதியாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். .இவர் ஹீரோயினாக அறிமுகமாகும் முன், 1998 இல் ஒரு ஆங்கில மொழித் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

Sri Divya

ஸ்ரீ திவ்யா

நடிகை ஸ்ரீ திவ்யா 2010 இல் வெளியான மனசார என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் ஹீரோயினாக மாறும் முன் 'ஹனுமான் ஜங்ஷன்' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் நடித்தார். 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

Hansika Motwani

ஹன்சிகா மோத்வானி

பாலிவுட் திரையுலகில் 2001 முதல் 2010 வரை பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஹன்சிகா. பின்னர் 2007-ம் ஆண்டு தேசமுத்ரு என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஹன்சிகா பிரபல நடிகையாக மாறினார்.

Nivetha Thomas

நிவேதா தாமஸ் ​​

நிவேதா தாமஸ் ​​'மை டியர் பூதம்' என்ற பிரபலமான சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார், மேலும் 2013 இல் 'நவீன சரஸ்வதி சபதம்' மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார். நிவேதா தாமஸ் சிறந்த குழந்தை நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றார்.

நஸ்ரியா நஜிம்

2006 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கிய நஸ்ரியா நஜிம், 2013 ஆம் ஆண்டு 'நேரம்' என்ற இருமொழிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை தனது முதல் திரைப்படத்திற்காக 8  விருதுகளைப் பெற்றார். அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Shamili

ஷாமிலி 

நடிகை ஷாலினியின் சகோதரியான ஷாமிலி  குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அஞ்சலி படத்தில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அஞ்சலி படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் ஷாமிலி தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 2006-ம் ஆண்டு 'வீர சிவாஜி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் ஹீரோயினாக நடித்தாலும் அந்த படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த ஷாமிலி ஹீரோயினாக வெற்றி பெறவில்லை. 

click me!