தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்திக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தை அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர். அடுத்த மாதத்தில் இருந்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தில் நடிக்க மொத்தமாக 7 நாள் கால்ஷீட் கொடுத்து உள்ளாராம் ரஜினி.
இதையும் படியுங்கள்... 'ருத்ரன்' பட வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் - சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்!
இதுதவிர ரஜினி கைவசம் மேலும் சில படங்கள் உள்ளன. அதில் ஒரு படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜும் ரஜினிக்கு கதை ஒன்றை சொல்லி உள்ளாராம் ரஜினி. இப்படி தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி அவரை தற்போது மேலும் ஒரு இயக்குனர் சந்தித்துள்ளது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் தங்கி உள்ளாராம். அவரை கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் சுதா கொங்கராவும் திடீரென சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.ஜி.எஃப் தயாரிப்பாளர்களுக்காக சுதா கொங்கரா ஒரு படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார். இந்த சந்திப்பின் மூலம் அது ரஜினிகாந்தின் படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இந்த திடீர் சந்திப்பால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜா அல்லது சுதா கொங்கராவா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சமந்தாவின் சாகுந்தலம் படத்தால் மரண அடி வாங்கிய தயாரிப்பாளர்! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? சிக்கலில் தில் ராஜு!