சமந்தாவின் சாகுந்தலம் படத்தால் மரண அடி வாங்கிய தயாரிப்பாளர்! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? சிக்கலில் தில் ராஜு!

Published : Apr 22, 2023, 09:22 PM IST

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சாகுந்தலம்' திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இப்படத்தால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
16
சமந்தாவின் சாகுந்தலம் படத்தால் மரண அடி வாங்கிய தயாரிப்பாளர்! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? சிக்கலில் தில் ராஜு!

நடிகை சமந்தாவின் சினிமா கேரியரில், அவர் மட்டும் அல்ல அவரது ரசிகர்களும், மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் சாகுந்தலம். புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம்,  பாக்ஸ் ஆபிஸில் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 
 

26

முன்னனி நடிகர்களின் படங்களுக்கு நிகராக, மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் 60 கோடியில் படமாக்கப்பட்ட நிலையில், இதுவரை 5 கோடி மட்டுமே  வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெறித்தனம்... சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' மேக்கிங் வீடியோவை வெளிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
 

36

மேலும் சாகுந்தலம் படத்தின், டிஜிட்டல் மற்றும் சாட்டலைட் விற்பனைக்கு குறித்து தெலுங்கு திரையுலகத்தில் கசிந்துள்ள தகவலின்படி, 'சாகுந்தலம்' படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், இப்படம் வெளியாவதற்கு முன்பே  ரூ 35 கோடிக்கு விற்பனையாகிவிட்டதாம். 

 

46

எனவே இந்த படத்திற்கு லாபம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை போட்ட பணத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்று, சாட்டிலைட் நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் தில் ராஜு 20 கோடி ரூபாய் வேண்டும் என அடம் பிடிக்க, படு தோல்வியடைந்த படத்திற்கு இவ்வளவு கொடுக்க முடியாது என, கறாராக கூறுகிறதாம் இவர் படத்தை விற்பனை செய்ய முயற்சி செய்யும் சாட்டலைட் நிறுவனங்கள்.

நந்தினியின் சதியே காரணம்..! கமல் ஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' இன்ட்ரோ வீடியோ!
 

56

இதன் விளைவாக, சாகுந்தலம் படத்தை தயாரித்தால், தில் ராஜு மற்றும் குணசேகர் ஆகிய இரு தயாரிப்பாளர்களும் கிட்டத்தட்ட  ரூ 20 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
 

66

இயக்குனர் குணசேகர் எழுதி இயக்கிய சாகுந்தலம் திரைப்படம், நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புராண நாடகம் ஆகும். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார். இந்த படத்தின் தோல்வியால் பிரபலம் ஒருவர் சமந்தாவின் திரையுலக வாழ்க்கையே முடிந்து விட்டதாக கருத்து கூறிய நிலையில், சமந்தா தன்னுடைய தோல்வியை கண்டு கொள்ளாமல்... அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் நடிச்சவங்களை விட நஷ்டப்பட்டவங்களுக்கு தானே தெரியும் வலியும் வேதனையும்....

இது என்ன சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு வந்த சோதனை..! ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

click me!

Recommended Stories