பாலிவுட் திரையுல நட்சத்திர தம்பதியான, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள், ஆராத்யா பச்சன், உடல்நிலை குறித்து போலியான செய்திகளை வெளியிட்டதற்காக யூடியூப் சேனல்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே போல் ஆராத்யா பற்றி தவறான தகவல்களை வெளியிட்டிருக்கும் "எல்லா வீடியோக்களையும் யூ டியூப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதி மன்றம், ஆராத்யா பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டு யூ டியூப் தளத்தை முடக்க அதிரடியாக உத்தரவிட்டது.
கடந்த 2021 இல் பாப் பிஸ்வாஸ் விளம்பரங்களின் போது, அபிஷேக் பச்சன் சமூக ஊடகங்களில் தனது மகளை தொடர்ந்து தாக்குபவர்களை கடுமையாக சாடினார். மகளை கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. நான் ஒரு பொது நபர், என்னை பற்றி விமர்சிக்கலாம், என் மகள் வரம்பிற்கு அப்பாற்பட்டவள். உனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் வந்து என் முகத்துக்கு நேரே சொல்லு” என்று கோபமுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.