இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு தன்னுடைய வயதுக்கு மீறிய மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டிய திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் என்கிற கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் சிம்பு. மேலும் இப்படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்து அசத்தினார்.
மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு தங்கையாக அனு சித்தாரா நடித்திருந்தார். அதே போல் பிரியா பவானிஷங்கர், கலையரசன், டீ ஜே அருணாச்சலம், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ புத்திரன், கெளதம் மேனன் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படத்தை, ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார்.
'பத்து தல' திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி, வெளியான நிலையில்... தற்போது இந்த படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம்... அதாவது ஏப்ரல் 27-ஆம் தேதி, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, சிம்பு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.