நயன்தாரா போல் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த பேமஸ் ஆனவர் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.