தமிழ் திரையுலகில், தளபதி விஜய், ஜெயம் ரவி, தனுஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து பிரபலமானவர் அமலா பால். முன்னணி நடிகையாக இருக்கும் போதே... தன்னை வைத்து, 'தலைவா' படத்தை இயக்கிய, இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு பின்னர் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால்... கடந்த இரண்டு வருடமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் போனது. இதன் விளைவாக அமலா பால், ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட துவங்கினார்.
வெள்ளை காஸ்ட்யூமில் கிளாமர் கொஞ்சம் கூடுதலாக காட்டி அமலாபால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், சில மணி நேரங்களிலேயே ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது.