ரஜினியை வைத்து வேறமாரி சம்பவம் செய்துள்ள நெல்சன்... இணையத்தில் லீக் ஆனது ஜெயிலர் படக் கதை?

First Published | Jul 18, 2023, 2:51 PM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி வைரலாக பரவி வருகின்றது.

விஜய் டிவியில் பணியாற்றிய நெல்சன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய சிம்புவின் வேட்டை மன்னன் படம் டிராப் ஆனதால் கோலமாவு கோகிலாவே அவரது முதல் படமாக அமைந்தது. போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார் நெல்சன். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கோலமாவு கோகிலா படத்தை டார்க் காமெடி ஜானரில் எடுத்து வெற்றி கண்டதால், அதே பார்முலாவுடன் டாக்டர் படத்தில் களமிறங்கினார் நெல்சன். ஆனால் இந்த முறை பணத்துக்காக இளம் பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பலை மையமாக வைத்து எடுத்திருந்தார். இப்படமும் அவருக்கு வேறலெவல் ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் மூலம் நெல்சனின் நட்சத்திர அந்தஸ்தும் உயர்ந்தது.

இதையும் படியுங்கள்... ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக வந்த ஹுகூம் பாடல்... ரிபீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்


இதையடுத்து நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம். விஜய் படம் என்பதால் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்ட நெல்சன், தீவிரவாதிகள் மால்-ஐ ஹைஜேக் செய்வது போன்று திரைக்கதை அமைத்திருந்தார். இது ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்து போன கதை என்பதாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததாலும், பீஸ்ட்டில் நெல்சன் போட்ட கணக்கு மிஸ் ஆனது. அப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

பீஸ்ட்டில் மிஸ் ஆனதை மீண்டும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்கிற திட்டத்தோடு அடுத்ததாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார் நெல்சன். இப்படம் எந்தமாதிரி கதைக்களத்தில் இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தின் கதை லீக் ஆகி உள்ளது. சிலைக்கடத்தலை மையமாக வைத்து தான் ஜெயிலர் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளாராம் நெல்சன். இதில் தொடர்புடைய முக்கிய நபர் ரஜினி ஜெயிலராக பணியாற்றி வரும் சிறையில் அடைக்கப்பட்டதும், அவனை சிறையிலிருந்து மீட்க ஒரு கும்பல் களமிறங்குகிறது. அந்த கும்பலை ரஜினி தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கருவாம். பீஸ்ட்டில் விட்டதை ஜெயிலரில் பிடிப்பாரா நெல்சன் என்பது ஆகஸ்ட் 10-ந் தேதி தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... பெயர தூக்க நாலு பேரு... பட்டத்த பறிக்க நூறு பேரு! சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஜெயிலர் ரஜினி கொடுத்த தரமான பதிலடி

Latest Videos

click me!