இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறை பற்றி வெளிப்படையாக பேசி பாராட்டுக்களை பெற்றார் மாரி செல்வராஜ். இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்த இப்படத்தை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்து அதிலும் வெற்றிவாகை சூடினார் மாரி செல்வராஜ்.
maamannan
உதயநிதி உடன் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனால் உதயநிதியின் கெரியரில் அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்கிற பெருமையை மாமன்னன் பெற்றுள்ளது. தமிழில் ஹிட் ஆனதை அடுத்து இப்படத்தை டப்பிங் செய்து கடந்த ஜூலை 14-ந் தேதி தெலுங்கில் ரிலீஸ் செய்தனர்.
maamannan
மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் ரிலீசாகி நான்கு நாட்களே ஆகும் நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தற்போது திடீரென அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற ஜூலை 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாமன்னன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்களில் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆக்கிரமித்து உள்ள காரணத்தால் தான் சீக்கிரமாகவே மாமன்னன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மீண்டும் வருகின்றார் பிரம்மாண்ட தயாரிப்பாளர்.. உருவாகும் ஜென்டில் மேன் 2 - கவிப்பேரரசு கொடுத்த அப்டேட்!