தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. குறிப்பாக அதில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படமும் ஒன்று. அட்லீ இயக்கும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் நயன்.
25
இப்படி தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது செம்ம அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அஜித்தின் ஏகே 62 படம் தான். இப்படத்தை முதலில் இயக்க கமிட் ஆனது நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான். விக்கிக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது நயன்தாரா தான் என கூறப்படுகிறது. அவர் அஜித்திடம் பேசியதன் மூலம் தான் விக்கிக்கு இந்த சான்ஸ் கிடைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.
35
ஸ்கிரிப்ட் தயார் செய்து விக்கி ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராகி வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் திடீரென அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் சொன்ன கதை அஜித்துக்கும், லைகா நிறுவனத்தினருக்கும் திருப்தி அளிக்காததால் அவரை அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதில் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கியதால் நடிகர் அஜித் மீது செம்ம கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா. இந்த சமயத்தில் ஒரு அதிரடி முடிவையும் அவர் எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு நயன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
55
அஜித்தும் நயன்தாராவும், இதற்கு முன்னர் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வந்த நயன்தாராவும், அஜித்தும் இனி ஜோடி சேர்ந்து நடிக்கப்போவதில்லை என்கிற தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் நயன்தாரா தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.