கொங்கரா இயக்கத்தில் சூர்யா (Suriya), அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த சூரரை போற்று கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறாக உருவான இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைம் வீடியோ மூலம் படம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது .