ஒரு கோடி பார்வையாளர்களை வென்ற சிம்பு பாடல்..மெட்டுக்களால் மனதை வருடிய ஏ.ஆர்.ரகுமான்!

Kanmani P   | Asianet News
Published : May 28, 2022, 05:06 PM IST

'காலத்துக்கும் நீ வேணும்' பாடல் ரசிகர்களின் மனதை வென்று 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. 

PREV
14
ஒரு கோடி பார்வையாளர்களை வென்ற சிம்பு பாடல்..மெட்டுக்களால் மனதை வருடிய ஏ.ஆர்.ரகுமான்!
Venthu Thaninthathu Kaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு புது அத்தியாயத்தை உருவாக்கியது. மாபெரும் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த சின்ஹா படம் நல்ல வசூல் வேட்டையை பெற்றது. இதைத்தொடர்ந்து, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் தற்போது  நடித்து முடித்துள்ளார்.

24
Venthu Thaninthathu Kaadu

நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வெளியான படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வெற்றிக்கு பின்னர்  5 வருடங்கள் கழிந்து இணைந்துள்ள படம்தான் 'வெந்து தணிந்தது காடு'. 

34
Venthu Thaninthathu Kaadu

இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக காயடுலோஹர் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரிலும், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இதற்கிடையே சமீபத்தில் இந்த படத்திலிருந்து காலத்துக்கும் நீ வேணும் என்னும் லிரிக் வீடியோ வெளியானது.

44
Venthu Thaninthathu Kaadu

மனதை வருடன் ஏ.ஆர் ரகுமானின் இசையில் தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சிலம்பரசன் டிஆர், ரக்ஷிதா சுரேஷ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களின் மனதை வென்று 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories