கமலுடன் கூட்டணி அமைக்கும் அஜித், விஜய்..மாஸ் அப்டேட் உள்ளே!

Kanmani P   | Asianet News
Published : May 28, 2022, 03:03 PM IST

கமலுக்காக சூர்யா, விஜய் இருவரும் படம் ஒப்பக்கொண்டதாக அரசபுரசல் செய்தி அடிபடுகிறது. 

PREV
14
கமலுடன் கூட்டணி அமைக்கும் அஜித், விஜய்..மாஸ் அப்டேட் உள்ளே!
vikram

உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் சார்பாக பல முன்னணி நாயகர்களின் படங்களை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் இந்நிறுவனம் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தை தயாரித்திருந்தது. இதில் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராஜ்கமல் நிறுவனம் கமலின் விக்ரம் படத்தை தயாரித்து வருகிறது. 

24
vikram movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜூன் 3 -ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.

34
vijay -suriya

இந்நிலையில் சூர்யா மற்றும் விஜயை வைத்து கமல் படம் தயாரிக்க விளைவதாகவும் இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் நாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடித்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து விஜய் மற்றும் சூர்யா இருவரும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

44
SK21

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் படத்தை ராஜ்கமல் ஒப்பந்தம் செய்துள்ளது. டான் படத்தை தொடர்ந்து சக் 20 -ல் நடித்து வரும் எஸ்.கே அடுத்தாக நடிக்கவுள்ள எஸ்.கே 21-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் தயாரிக்கிறது. ஆக்சன் ட்ராமாவானா படத்திற்கு மாவீரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories