நீண்ட நாள் காதலியான நடிகையை கரம் பிடித்த 'சூரரை போற்று' பிரபலம்!

First Published | Aug 24, 2022, 10:46 PM IST

'சூரரை போற்று' படத்தின் ஒளிப்பதிவாளருக்கும், பிரபல நடிகையும் ஆர்.ஜேவுமான ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதை அடுத்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

நடிகர் சூர்யா நடிப்பில், வெளியாகி ஐந்து தேசிய விருதுகளை இந்த ஆண்டு பெற்ற திரைப்படம் 'சூரரை போற்று '. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்த இந்த படத்திற்கு, நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் நிக்கேத் பொம்மி ரெட்டி, தனது நீண்ட நாள் காதலியான பிரபல நடிகை மற்றும் ஆர்.ஜே மெஸ்ஸி ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படங்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நான்கு நடிகர்களை உறுதி செய்த சன் பிச்சர்ஸ்!
 

Tap to resize

நடிகை மெர்சி ஜான் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அமேசான் பிரைம் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதை போல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், ஆர்.ஜே-வாகவும் பணியாற்றி வருகிறார்.

 தற்போது நிக்கேத் பொம்ம ரெட்டி மற்றும் மெர்சி ஜான், பட்டு புடவை மற்றும் பட்டு வேஷ்டியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் செய்திகள்: வாயில் டின்னுடன்... டீப் நெக் உடையில்... தொடை முழுவதையும் காட்டி.. உச்ச கவர்ச்சியில் ஷிவானி கொடுத்த கூல் போஸ்!
 

Latest Videos

click me!