தமிழ் திரையுலகில் தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை, 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய படத்தை இயக்கிய இயக்குவர் ராஜு முருகன் இயக்குகிறார்.
இதனிடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'வந்திய தேவன்' கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ponniyin selvan teaser evend photos
பொன்னியின் செல்வன் படத்தின் வால் பிடித்து சண்டை போடும் காட்சியில் கூட, கார்த்தி டூப் போடாமல் நடித்து பட குழுவினரின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்திலும் யாரும் எதிர்பாராத கெட்டப்பில் நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவார் என படக்குழு தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.