ஒரு பாடகியாக சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆண்ட்ரியா, தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் பாட... சமந்தா குத்தாட்டம் போட என அசத்தல் காமினேஷனில் வெளியான இந்த பாடல் சில விமர்சனங்களை பெற்ற போதிலும், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
கதைக்கு தேவை என்றால்... எப்படி பட்ட கவர்ச்சி வேடத்திலும் துணிந்து நடிப்பவர் ஆண்ட்ரியா. இதற்க்கு உதாரணமாக தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள, 'பிசாசு 2 ' படத்தில் கதைக்கு தேவை என்பதால்... நிர்வாண காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்போதும் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஆண்ட்ரியா, தற்போது தன்னுடைய தங்கையின் திருமண புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
இந்த திருமணத்தில் கூட நடிகை ஆண்ட்ரியா கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், சில ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.