தென்னிந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் ஆளுமை கொண்ட இவருக்கு சோபன் பாபு கூறிய விஷயம் அப்படியே நடந்ததாக தெரிவித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரகாஷ் ராஜ்
தென்னிந்திய சினிமாவல் சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுத்து விடுவார். குறிப்பாக வில்லனாக நடிப்பதில் இவரை, மிஞ்ச ஆளே கிடையாது என்பது போல், நடிப்பில் அசுர தனத்தை வெளிப்படுத்த கூறியவர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், அடிக்கடி தானாக சில சர்ச்சையான விஷயங்களை பேசி பிரச்சனையில் சிக்கி கொள்வார்.
25
அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் பிரகாஷ் ராஜ்:
அனைவரிடமும் அன்பாக பழக கூடிய பிரகாஷ் ராஜுக்கும், நடிகர் சோபன் பாபுவிற்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. பிரகாஷ் ராஜ் அப்போதுதான் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியிருந்தார். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாராம். சோபன் பாபு நடித்த 'தொரபாபு' படத்தில் பிரகாஷ் ராஜுக்கு 1995 இல் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் சண்டைக் காட்சியொன்றில் பிரகாஷ் ராஜ் சோபன் பாபுவை நோக்கி ஆவேசமாக வருவது போல் காட்சி இருந்ததாம்.
இதை பார்த்து, சோபன் பாபு 'கொஞ்சம் நிதானமாக இருங்கள் பிரகாஷ்.. ஏன் மிகவும் ஆவேச படுகிறீர்கள். இது நடிப்பு மட்டுமே' என்று அன்பாக எச்சரித்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியபோது சோபன் பாபு கூறிய ஒரு வார்த்தையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என பிரகாஷ் ராஜ் இப்போது பகிர்ந்துள்ளார்.
45
சோபன் பாபு கூறிய அறிவுரை
அதாவது பிரகாஷ் ராஜ் சோபன் பாபுவிடம் 'நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை பார்க்க வருவேன்' என கூறியுள்ளார். அதற்க்கு சோபன் பாபு சிரித்துக்கொண்டே, 'நீங்கள் என்னை வந்து சந்திக்க மாட்டீர்கள், ஏனென்றால் அந்தளவுக்கு பிஸியாகிவிடுவீர்கள் 2 வருடங்களுக்குப் பிறகு' பாருங்கள் என்றாராம்.
'குருவே, அன்று நீங்கள் இப்படிக் கூறினீர்கள். நீங்கள் சொன்னதுபோலவே நான் உங்களைச் சந்திக்க முடியவில்லை. ஒரு கலைஞனாக, அவர் சொன்னது போல் மிகவும் பிஸியாகிவிட்டேன்' என தெரிவித்துள்ளார். தன்னை பற்றி சரியாக அப்போது அவர் கணித்திருந்தார் என பிரகாஷ் ராஜ் தன்னுடைய பேட்டியில் கூறி உள்ளார்.